நிரம்பியது பில்லூர் அணை! வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14000 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் இருக்கக்கூடிய முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல சோலையாறு, ஆழியாறு பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய பில்லூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. குறிப்பாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருக்கக்கூடிய கேரளா அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பில்லூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக உயர்ந்து. அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக நேற்று நள்ளிரவு அணைக்கான நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 97 அடி என்ற இலக்கை எட்டியது. இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நான்கு மதங்கள் வழியாக தற்பொழுது 14000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களாக இருக்கும் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி சிறுமுகை, வச்சினம்பளையம், லிங்காபுரம் உள்ளிட்ட ஆற்றோரை பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என கூறப்படுவதால் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மேட்டுப்பாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலாஜி மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா நேரடி மேற்பார்வையில் வருவாய்த் துறையினர் காவல்துறையினர் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









