தொழிலாளர்கள் உரிமை தட்டிப்பறிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!
தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து செங்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது. 8 மணி நேர வேலை நேரத்தை அதிகரிக்கக் கூடாது. பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களில் நல வாரியத்தில் பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா வைரஸூக்கு எதிராக களப் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள், மின்சார துறை வருவாய்த்துறை ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்களை பாதுகாக்க வேண்டும் ஊரடங்கு காலத்தில் தொழில் செய்ய முடியாமல் முடங்கி கிடந்த நடைபாதை வியாபாரிகளுக்கு மத்திய அரசு அறிவித்த கடன் உதவி மற்றும் நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் அவர்கள் தொழில் துவங்க ஏதுவாக வங்கிகளில் எவ்வித நிபந்தனையுமின்றி வட்டியில்லா கடன் உடனடியாக வழங்க வேண்டும் ஊரடங்கால் தொழில் இழந்து முடங்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் மேலும் ஆட்டோகளில் கூடுதல் நபர்களை ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் செங்கொடி ஏந்தி சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிஐடியு தொழிற்சங்க அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மேட்டுப்பாளையம் தாலுக்கா பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் S.பாஷா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் ராஜரத்தினம், செயலாளர் ராஜா சாகுல் அமீது, துணைத் தலைவர்கள், கனி, பதுருதீன், காளீஸ்வரன் துணைச் செயலாளர்கள், சென்னியம்மா, காளிதாஸ் உள்ளிட்ட, நிர்வாகிகள் மற்றும் ஆனந்தி, ஈஸ்வரி, லட்சுமி, ஜெயந்தி, குணசுந்தரி, அம்பிகா, வசந்தா, நவ்ஷாத், லத்தீப், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை முழங்கினர்.


You must be logged in to post a comment.