கோவையில் கோர விபத்து..7 பேர் பலி.. பல பேர் படுகாயம்.. சொகுசு காரின் அதிவேக வினை… வீடியோ பதிவு..

கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை அருகே அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆடி கார் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் மீது மோதியதில் ஏழு பேர் சமபவ இடத்திலேயே இறந்துள்ளனர்.

இதில் ஐந்து பெண்கள் இரண்டு ஆண்கள் இறந்துள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த இருவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோவை ஈச்சனாரியிலுள்ள ரத்தினம் கல்லூரியின் உரிமையாளரின் கார் எனத்தெரிய வந்துள்ளது. காரை ஒட்டி வந்த ஜெகதீஷ் மயக்கம் ஏற்பட்டு கார் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறியுள்ளார். அவரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயமைடந்தவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!