தமிழகம் தழுவிய அளவில் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்-தமிழக அரசு கண்டுகொள்ளுமா..?
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வருகிற 07.05.2020 அன்று அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
கொரோனா பேரிடர் குறித்து TARATDAC-அமைப்பினர் கூறுகையில் ஊரடங்கு காரணமாக 3-வது கட்ட ஊரடங்கு தற்போது அமலுக்கு வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இந்த ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றுள்ள குடும்பங்கள் விவரிக்க முடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
பசி, பட்டினியாலும், மருந்து மாத்திரைகள் வாங்க முடியாமலும், பிரத்யேக அவசர செலவுகளுக்கு கூட காசு இல்லாமலும் பல லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் அல்லல்படுகின்றனர்.
இந்த நிலை குறித்து மாநில முதலமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பல முறை மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் பல முறை விளக்கி மனுக்கள் அனுப்பியும், உயர் அதிகாரிகளுடன் பேசியும் எந்தப் பலனும் இல்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன் அடுத்த கட்டமாக தமிழகம் தழுவிய அளவில் மாற்றுத்திறனாளிகளை ஒன்று திரட்டி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தும் நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதாக TARATDAC மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் நிலைகளை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா..?
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.