செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி சொந்த நிதி ரூ.2,00,000 மதிப்பீட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னோடியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தனது சொந்த நிதி ரூ.2,00,000 மதிப்பீட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னோடியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முன் நடவடிக்கையாக தமிழகஅரசு அல்லும் பகலும் பாடுப்பட்டு வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதியில், கொரானோ வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தனது சொந்த நிதியில் தொகுதியில் உள்ள பொது மக்களின் நலன் கருதி ரூபாய் 2,00,000 மதிப்பீட்டில் மருந்து தெளிப்பான்கள், கிருமிநாசினிகள், முகக் கவசங்கள் கை உரைகள் போன்றவைகளை தொகுதியில் உள்ள செங்கம் பொது மருத்துவமனை, செங்கம் காவல் நிலையம், மேல்செங்கம் காவல் நிலையம் ,,பாச்சல் காவல் நிலையம், மேல் பள்ளிப்பட்டு வட்டார மருத்துவமனை, ஆனந்தவாடி சோதனைச் சாவடி, நீப்பத்துறை சோதனைச்சாவடி, இளங்குன்னி சோதனைச்சாவடி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் 44 கிராம பஞ்சாயத்துகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கை பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். நிகழ்வின்போது ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









