கொரோனா பரவலை தடுக்க சுரண்டை எல்லையில் சோதனை சாவடி அமைப்பு-போலீசார் நடவடிக்கை…
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சுரண்டை போலீசார் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு உட்பட பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஊரடங்கு காரணமாக மளிகை மற்றும் காய்கறி கடைகள் பகல் ஓரு மணி வரை மட்டுமே செயல்படுகிறது.
இந்நிலையில் அவசிய தேவையின்றி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்த ஏற்கனவே முக்கிய தெருக்களில் கம்பு மற்றும் மரத்தடிகளை வைத்து அடைக்கப்பட்டுள்ள நிலையில் சுரண்டை சங்கரன்கோவில் மெயின் ரோடு காலேஜ் சாலையில் தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணா சிங் மற்றும் ஆலங்குளம் டிஎஸ்பி ஜாஹீர் ஹீசைன் ஆலோசனை பேரில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஏற்பாட்டில் எஸ்ஐ ஜெயராஜ், மற்றும் எஸ்எஸ்ஜக்கள் போலீஸ் அடங்கிய தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சுரண்டைக்குள் வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









