ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு அனைவரது வீட்டிலும் மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி..

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு அனைவரது வீட்டிலும் மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி.. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் நடமாட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். பிரதமர் மோடி அதில் கூறியதாவது;-

மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள் ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன் இணைந்துள்ளோம் நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும். கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும் வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!