சுரண்டையில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி-காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு…
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டையில், அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்ய இயலாமல் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர், முதியோர், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 500 பேர்களுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி உதவிகளை வழங்கி துவக்கி வைத்தார். மாநில பேச்சாளர் எஸ் ஆர் பால்த்துரை, நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், மாவட்ட துணைத்தலைவர் பால் (எ) சண்முகவேல், ஊடகபிரிவு சிங்கராஜ், நாட்டாமை ராமராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் பிஎம் செல்வன், மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் தினகரன், மாவட்ட பொதுச்செயலாளர் ஏஜிஎம் கணேசன், தெய்வேந்திரன், செல்வராஜ், சங்கர், சமுத்திரம், தர்மராஜ், செல்லப்பா, பிரபு, உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனிநாடார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக தலைவர் அழகிரி ஆலோசனையின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அந்தந்த பகுதிகளில் தங்களால் இயன்ற அளவிற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பொது மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சுரண்டை தொழிலதிபர் எஸ்.வி.கணேசன் ஏற்பாட்டில் இலவசமாக முக கவசங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் மற்றும் எஸ்.வி.ஜி பாசறை சார்பில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லும் பெண்கள் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோருக்கு வீடு வீடாக சென்று சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.வி.ராமர் பொருட்களை வழங்கினார். உடன் துணை தலைவர் அண்ணாமலைக்கனி, சங்க செயலாளர் முருகன்.பொருளாளர் சங்கர், பாலன், ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









