திண்டுக்கல் 15,16,17,வது வார்டுகளில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் முக கவசங்கள் வழங்கிய வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான குப்புச்சாமி!
கொரானா தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல ஏழை எளிய மக்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இதே போன்று மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதனை அறிந்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான குப்புச்சாமி அவர்கள் 15,16,17,வது வார்டுகளில் தேவையுடைய நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, என்னை, போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து மக்களுக்கு முக கவசங்களையும் இலவசமாக வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.இது சம்பந்தமாக அந்த பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் முபாரக் அலி கூறியதாவது, தோழர் குப்புசாமியின் பணிகள் பாராட்டக்கூடியது. எப்பொழுது எந்த பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் ஓடி ஓடி உதவிகள் செய்யக்கூடியவர் என்று கூறியுள்ளார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









