செங்கோட்டை பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்,சுகாதார பணியாளர்களுக்கு குடி தண்ணீர் பாட்டில்கள் வழங்கல்..
கொரானா நோயைத் தடுக்கும் வகையில் பணியாற்றி வரும் செங்கோட்டை மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு செங்கோட்டை நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக குடிதண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
செங்கோட்டை மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள் , செவிலியர் , நோயாளிகள், பயன்பெறும் வகையில் பாட்டில் குடி தண்ணீர் வழங்கப்பட்டது. பானைகள், இதரப் பொருட்களில் வைத்து குடிநீர் பயன்படுத்தும் போது டம்ளர் மூலம் கொரானா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.
இதைத் தவிர்க்கும் வகையில் பாட்டில்களில் தண்ணீர் பயன்படுத்தும் போது கொரானா வைரஸ் பரவுவது தடுக்கப்படும். எனவே ஊரடங்கு உத்தரவு முடியும் வரை தண்ணீர் பாட்டில்கள் மருத்துவமனைக்கு வழங்குவதென்று செங்கோட்டை நூலக வாசகர் வட்டம் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக நூலக வாசகர் வட்டத் தலைவர் பொறியாளர் இராமகிருஷ்ணன் அவர்கள் குழந்தைகள் நல சிறப்பு மற்றும் பொது மருத்துவர் தமிழரசன் அவர்களிடம் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். இந்நிகழ்வில் நூலக வாசகர் வட்டச் செயலாளர் நன்னூலகர் ராமசாமி, பொருளாளர் தண்டமிழ்தாசன் பா சுதாகர், துணைத்தலைவர் ஆதிமூலம், விழுதுகள் அறக்கட்டளை சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சித்த மருத்துவர் கலா, மனநல மருத்துவர் சுரேஷ், மற்றும் செவிலியர்கள், அலுவலகப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். நிறைவாக செங்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









