தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அரசமரத் தெரு ரேஷன் கடையின் முன்பு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது. தகவலறிந்த ரேஷன் அட்டைதாரர்கள் டோக்கனை வாங்க ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்தனர் இரண்டு மூன்று கடைகளுக்கு ஒரே இடத்தில் டோக்கன் வழங்கப்பட்டதால் டோக்கன் வாங்க வந்திருந்த பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்திய போதிலும் மக்கள் கூட்டமாக நின்றதால் போதிய இடைவெளி விடாமல் நெருக்கமாக நின்ற நிலை ஏற்பட்டது. இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். வீடுகள் தோறும் டோக்கன்கள் விநியோகித்தால் இவ்வாறு கூட்டம் ஒரு இடத்தில் குவிவது தடுக்கப்படும். எனவே வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

You must be logged in to post a comment.