மதுப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட மெக்கானிக்; திருந்தச் செய்த கொரோனா வைரஸ்- வைரல் வீடியோ..

மதுப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட மெக்கானிக்; திருந்தச் செய்த கொரோனா வைரஸ்- வைரல் வீடியோ..

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலங்களில் நாட்டில் அவ்வப்போது மனதை நெகிழ வைக்கும் சில சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த மெக்கானிக் ஒருவர் தற்போது அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும்,நல்ல எண்ணம்,நல்ல சிந்தனையோடும் உள்ளதாக பேசும் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

அதில் அவர் கூறும்போது, தனது பெயர் முருகன் என்பதாகவும்,தான் அதிகமாக குடிப்பவர் என்றும்,மதுவால் தமது குடும்பம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இனி மது கடைகளே திறக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர் என்னைப் போல் பல குடும்பங்கள் மதுவால் பாதிக்கப்படுவர் என்றும், டாஸ்மாக் கடைகள் வேண்டாம் எனவும் கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நாட்டில் மதுவின் காரணமாக பல்வேறு ஆபத்துகள்,பல குற்ற சம்பவங்கள்,சட்ட விரோத செயல்பாடுகள் பல நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாலும், பொது மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது என்பதாலும் எல்லாக் காலங்களிலும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடிட அரசு உத்தரவிட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தித்தொகுப்பு அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!