காங்கிரஸ் திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கல்..

காங்கிரஸ் திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கல்..

காங்கிரஸ்,திமுக சார்பில் கொரொனா நிவாரண உதவி வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் ஆலோசனையின் படி கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 100 எளிய குடும்பங்களுக்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்‌கேடி ஜெயபால் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் பால் எ சண்முகவேல், முன்னாள் கவுன்சிலர் அருணா டெய்லர், ஊடக பிரிவு சிங்கராஜ், மோகன்ராஜ்,  டயர் செல்வம், டூவின்ஸ் கோபால், செல்வம், செல்லப்பா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக வழங்கி நிவாரண உதவி அளித்ததோடு கொரோனாவை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்கவும், முக கவசம் அணியவும், கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக இருந்திடவும் அறிவுறுத்தினர்.

மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள்,  ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்படும் எளிய மக்களுக்கு உதவி செய்ய திமுக தலைவர் ஸ்டாலினின் அறிவுறுத்தியதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாபன் ஆலோசனையின் படி ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் சுரண்டை பகுதியில் கொரோனா நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறி, பருப்பு, எண்ணெய், உணவு பொட்டலங்கள், மாஸ்க், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆறுமுகசாமி, கணேசன், ஜெயராஜ், ஐயப்பன், மனோகர், உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!