தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:- சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்..

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:- செய்யப்ப சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்..

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,075 ஆக இருந்தது.

இந்த நிலையில், இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். பீலா ராஜேஷ் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 58 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. 33,850 வீட்டுக்கண்காணிப்பிலும் 136 பேர் அரசு முகாமிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

63,380 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. இதுவரை 12746 ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை உள்ள சோதனை மையங்கள் அரசு – 25 தனியார் -9 – புதியதாக 2 மையங்களுக்கு இன்று அனுமதி கிடைத்துள்ளது”இவ்வாறு அவர் கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!