திண்டுக்கல் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் போதிய வசதிகள் இல்லை – மாவட்ட ஆட்சியருக்கு SDPI திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மை. வீரர் அப்துல்லா கோரிக்கை!
கடந்த 03.04.2020 அன்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கைபடி திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பிட்ட மருத்துவமனைகளின் தற்போதைய சூழல் போதிய அடிப்படை வசதிகள் அற்றதாகவும் மற்றும் குறைவான ஊழியர்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. திண்டுக்கல்லில் உள்ள அரசால் அறிவிக்கப்பட்ட புனித வளனார் மருத்துவமனைக்குச் செல்லும்போது அங்கு இருக்கக்கூடிய நிர்வாகம் எங்களுக்குப் போதுமான மருத்துவர்களோ செவிலியர்களோ ஊழியர்களோ இல்லை, அரசு எதனடிப்படையில் எங்கள் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தது என்பதே எங்களுக்குத் தெரியவில்லை என தன் உண்மை நிலையை வெளிபடுத்துகின்றனர். எனவே பரிசோதனைக்குச் செல்லும் மக்களுக்கு கூட இந்த மருத்துவமனைகளில் பயன் இல்லை என்பதே உண்மையான நிலவரம்.
எனவே சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அதிகமான ஊழியர்களைக் கொண்ட, அடிப்படை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளை சிகிச்சைக்காகவும் பரிசோதனைக்கும் பரிந்துரை செய்யுமாறு எஸ்டிபிஐ கட்சி சார்பாக கோரிக்கையை முன் வைக்கிறேன் என கூறியுள்ளார்..

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









