திருச்சி குணசீலம் பெருமாள் கோயில் முன்பு, அமைச்சர் வளர்மதி மகன் திருமணம் ஆடம்பரம் இல்லாமல், சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.!

திருச்சி குணசீலம் பெருமாள் கோயில் முன்பு, அமைச்சர் வளர்மதி மகன் திருமணம் ஆடம்பரம் இல்லாமல், சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.!

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த, குனசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நலத்துறை அமைச்சருமான வளர்மதி இளைய மகன் ஹரிராம் – மணமகள் சூரியபிரபா ஆகியோரது திருமணம் சமூக இடைவெளியுடன் ஆடம்பரமின்றி நடைபெற்றது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 3 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தடை உத்தரவு முடிந்ததும், தமிழக அமைச்சர் வளர்மதி இளைய மகன் திருமணம் கடந்த 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, சிறப்பாக நடைபெற இருந்த, நிலையில் ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதன் காரணமாக அமைச்சர் வளர்மதி மகன் திருமணம் ஆடம்பரமின்றி சமூக இடைவெளியுடன் திருச்சி குணசீலம் பெருமாள் கோவிலில் நடைபெற்று முடிந்தது.

இந்த திருமண நிகழ்ச்சியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப உறவுகள் மட்டும் வந்திருந்தனர். அவர்களும் முக கவசம் அணிந்து, கைகளை சுத்தம் செய்யும் நோக்கில் கிருமிநாசினிகள் கொடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அமைச்சர் வளர்மதி – சீத்தாராமன் ஆகியோரது இளையமகன் ஹரிராம் – திருச்சி மருதாண்டா குறிச்சியை சேர்ந்த சண்முகசுந்தரம் – சந்திரா ஆகியோரது மகள் சூரியபிரபா ஆகியோரது திருமணம் பூட்டப்பட்டிருந்த கோவில் வாசல் முன்பு கோவிலின் பரம்பரை நிர்வாக டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் தாலி எடுத்து கொடுக்க திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் தமிழரசி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டும் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!