ஏழை குடும்பங்களுக்கு உதவிய கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர்

கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வேலை வாய்ப்பின்றி, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது

.இந்நிலையில், வேலைக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், மயிலாடுதுறை சித்தர்க்காடு அரவிந்த் கேட்டரிங் சர்வீஸ் நிர்வாகிகள் பூமிநாதன் மற்றும் அரவிந்த் ஆகியோர் காவிரி அமைப்பின் நிர்வாகிகளோடு இணைந்து மயிலாடுதுறை, கீழபட்டமங்கலம், மேலபட்டமங்கலம், பாலாக்குடி, மன்னம்பந்தல், சீனிவாசபுரம், வை.பட்டவர்த்தி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஏழை குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!