கூத்தாநல்லூர் நகராட்சியின் தொடர் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து SDPI கட்சி நடத்திய மாபெரும் கூத்தாநல்லூர் நகராட்சி முற்றுகை போராட்டம் | ஏராளமானோர் பங்கேற்பு..
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் 1), ஊரில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி குளங்களில் நீர் நிரப்ப தவறியது, 2), குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகள் படுமோசமானதை கண்டும் காணாமல் இருப்பது, 3), பல லட்சம் மக்கள் வரி பணத்தை செலவு செய்து புதிய பேருந்து நிலையம் கட்டி மாடுகளுக்கும், போதை பிரியர்களுக்கும் தாரை வாத்து கொடுத்தது, 4), நாய்கள், பன்றிகள், மாடுகள் அலைவதால் ஏற்படும் விபத்துகளை கண்டும் காணாமல் இருப்பது போன்ற பல்வேறு நகராட்சியின் தொடர் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து SDPI கட்சியின் சார்பில் செயல்படாத திமுக நகர்மன்ற தலைவர் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பதவி விலக கோரி கூத்தாநல்லூர் நகர SDPI கட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று (19.11.2024) நகர தலைவர் I.ஜாஹிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
இப்போராட்டத்தின் துவக்கமாக நகர செயலாளர் J.J.முஹம்மது அப்துல்லாஹ் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் M.விலாயத் உசேன், விமன் இந்தியா மூவ்மெண்ட் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநில பொதுச்செயலாளருமான A.M.ஃபாயிஜா சஃபீக்கா ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இப்போராட்டத்தின் இறுதியாக நகர துணை தலைவர் M.R.E.அப்துல் ரஹ்மான் அவர்கள் பெருந்திரளாக போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டு நகராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பை தெரிவித்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
இதில் தொகுதி செயலாளர் S.ஜாஸிம் இலாஹி, தொகுதி செயற்குழு உறுப்பினர் H.அபுதாஹிர், நகர துணை தலைவர் கோஸ் அன்வர்தீன், நகர இணைச் செயலாளர்கள் K.A.அப்துல் கஃபூர், D.காதர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர்கள் K.A.அஹ்மதுல்லாஹ், T.A.S.அமீர் சுல்தான் மற்றும் வார்டு கிளை நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தின் வாயிலாக இன்னும் ஒருமாத காலத்திற்குள் SDPI கட்சியின் மக்களுக்கான கோரிக்கைகளை காலதாமதமின்றி உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும், இல்லையெனில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி நகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு மிகப்பெரிய அளவில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
You must be logged in to post a comment.