இன்று (27/01/2019) முதல் அதிவிரைவு ரயில்கள் கொடை ரோடு நிலையத்தில் நின்று செல்லும்..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்ப்படுத்தப்பட்ட பாரம்பரியமிக்க இரயில் நிலையம். இந்த இரயில் நிலையத்திலிருந்ந்து தான் மலைகளின் இளவரசி கொடைக்கானல், தேனி, பெரியகுளம், வத்தல குண்டு, நிலக்கோட்டை, செம்பட்டி உட்பட பல்வேறுபகுதிகளுக்கு பயணிகள் சென்று வருகின்றனர்

மேலும் இந்த பகுதி அதிக விவசாயிகள், மாணவர்கள், வணிகர்கள், பயணிகள் மதுரை திண்டுக்கல் உட்பட நகரங்களுக்கு சென்று வந்தனர் இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை உட்பட வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் அதிவிரைவு இரயில்கள் கொடைக்கானல் ரோட்டில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்யையும், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் M. உதயகுமாரின் தொடர் கோரிக்கையினை ஏற்று மத்தியரசின் இரயில்வே நிர்வாகம் குருவாயூர் அதிவிரைவு இரயில், தேஜாஸ்வி அதிவிரைவு நவீனசொகுசு இரயில் , மற்றும் இராஜஸ்தானிலிருந்து சென்னை வரை வந்து சென்ற பிக்கானியர் அதிவிரைவு இரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதுவும் கொடைக்கானல் ரோட்டில் நின்று செல்ல மத்தியரசு உத்தரவிட்டுள்ளது

அதன்படி இன்று முதல் சென்னையிலிருந்து குருவாயூர் சென்ற அதிவிரைவு இரயில் கொடைக்கானல் ரோட்டில் நின்று சென்றதுனர் M. உதயகுமார் அவர்கள் வரவேற்று பூக்கள் தூவி கொடியசைத்து துவக்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

மேலும் அடுத்த மாதம் முதல் மதுரையி விருந்து சென்னை செல்லும் வைகை அதிவிரைவு இரயிலும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாகவும் மத்திய ரசிலிருந்து விரைவான அதற்கான அறிவிப்பு வரும் எனவும் தெருவித்தார்.

செய்தி:- ராஜா, நிலக்கோட்டை

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!