கொடைக்கானலில் சன் லயன்ஸ் சங்கம் தேனி அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்…வீடியோ ..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அண்ணா சாலையில் உள்ள இந்து மகாஜன ஆதித்தனார் திருமணமண்டபத்தில் சன் லயன்ஸ் சங்கம் மாவட்டப் பார்வை இழப்புத் தடுப்புச் சங்க உதவியுடன் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கொடைக்கானல் சன் ஜெய்ன்ஸ் இண்டர்நேஷனல் கிளப் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் சன் அரிமா சங்க பட்டைய தலைவர் டி பி ரவீந்திரன் தலைமையில் சன் லயன்ஸ் கிளப்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அருண் ரவீந்திரன், செயலாளர் அப்பாஸ், பொருளாளர் திரவியம் ஆகியோரால் திறமையான கண் பார்வை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கொடைக்கானல் ஏழை எளிய மக்களுக்கு கண் சிகிச்சை பரிசோதனைகள் செய்யப்பட்டு கண் கண்ணாடிகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கீழைநியூஸ் கொடைக்கானல் செய்தியாளர் கோடைரஜினி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!