கொடைக்கானல் அருகே மன்னவனூர் கைக்காட்டியில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்…வீடியோ பதிவு..

திண்டுக்கல் மாவட்டம் மலையின் அரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கி மி தொலைவில் உள்ள மன்னவனூர் கைகாட்டி என்ற இடத்தில் அழகிய ஏரி உள்ளது அதன் அருகே மத்திய அரசின் செம்மறியாடு பண்ணை மற்றும் முயல் பண்ணையும் உள்ளது இதைக்கான பல வெளி மாநிலங்களிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் பக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கால்நடை மருந்தகம் எதிர்புரம் அரசு மதுபான கடை உள்ளது அருகில் பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் இருக்கும் காரணத்தால் சேறும் சகதியுமாக இருப்பதால் குடிமகன்கள் சரக்கை வாங்கிகொண்டு இங்கு சாப்பிடுகின்றனர் பின்பு அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் இவர்களின் செயல்களை கண்டு முகம் சுழிக்கின்றனர் இதனால் காலையிலே வேலைக்கு செல்லாமல் பிளாக்கில் கிடைக்கும் போலி மது பானங்களை குடித்து விட்டு இங்கே இருந்து விடுகின்றனர் என்று கூறும் பெண்கள் கூடியவிரைவில் மதுக்கடையை அகற்ற போராட்டம் நடத்துவோம் இந்த கடையினால் பல குடும்பங்கள் சீரழிந்து போகும் நிலைமை உண்டாகிறது ஆகவே, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் தலையிட்டு கடையை அப்புறப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!