இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 முஸ்லிம்கள் பட்டியலில் ;பேராசிரியர் KM காதர் மொகிதீன் இடம் பெற்றுள்ளார்..
இந்தியாவில் மிகுந்த செல்வாக்குடைய 100 முஸ்லிம்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான பட்டியலை, சிறுபான்மையினர் ஊடக அறக்கட்டளையும் (Minority Media Foundation) முஸ்லிம் மிரர் செய்தி நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் MA Ex MP உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் அவர்களின் சாதனைகள், தலைமைப் பண்பு, சமூகத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களைப் பற்றி தவறான பிம்பத்தை உருவாக்கும் பெருநிறுவன ஊடகங்களின் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்துடன் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டதாக முஸ்லிம் மிரர் நிறுவனத்தின் ஆசிரியர் சையத் சுபைர் அகமது குறிப்பிட்டார். நாட்டின் மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், அசாம் முதல் குஜராத் வரையிலும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, பல்வேறு முஸ்லிம் பிரிவுகளைச் சார்ந்தவர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார், ஆமிர் இத்ரீசி, ஆமிர் கான், AR ரஹ்மான் அப்துல் ஹமீத் நௌமானி, அப்துல் காதர் ஃபஸ்லானி, அப்துல் கதீர், அப்துல்லா குஞ்ஞு, சல்மான் கான், அர்ஷத் மதானி உட்பட நூறு பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
You must be logged in to post a comment.