கீழக்கரையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போரட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து இன்று காலை 09.00 மணி முதல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இப்போராட்டத்தில் 1000த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். மேலும் இப்போராட்டத்தில் PETAவுக்கு எதிராக கோஷமிட்டும் ஜல்லிக்கட்டு உடனே நடத்த வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

சுமார் 11.00 மணியளவில் கல்லூரி நிர்வாக வாகனத்தில் மாணவ மாணவிகளை பட்டினம்காத்தான் ஊராட்சி அலுவலகத்தில் ஏற்றி சென்று இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர் மாணவ மாணவிகள் பிற கல்லூரி மாணவர்களுடன் இணைந்து இராநாதபுரத்தை நோக்கி பெரும் பேரணியாக சென்றனர்.


Congratulation youngsters