கீழக்கரை காவல் நிலையத்தில் கடந்த சில வருடங்களாக நட்புறவோடு சிறப்பாக பணியாற்றி நம் நகர மக்களின் அன்பை பெற்ற சார்பு ஆய்வாளர் சிவசுப்ரமணியம் அவர்கள் பணி மாறுதலின் காரணமாக கீழக்கரையை விட்டு மதுரை மாற்றலாக செல்கிறார்.

கீழக்கரை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் அவருடைய கடந்த கால பணிக்காக பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

கீழக்கரைக்கு அவர் நட்புடன் செய்த பணிக்கு மரியாதை செய்யும் விதமாக மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக கழகத்தின் செயலாளர் முகைதீன் இபுறாகீம், பொருளாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன், கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ண மூர்த்தி,நகர் நல இயக்கம் பஷீர் அகமது, சாகுல் ஹமீது, காஞ்சிரங்குடி ஜமாத் தலைவர் மற்றும் SDPI சார்ந்த சித்தீக், குத்பு ஜமான், ராசிக் ஆகிய நகர் நிர்வாகிகள், சேகர், மணிகண்டன், கெஜி, செல்வகணேஷ பிரபு, நாகராஜ் மற்றும் காவல் துறையினர் அவர் பணியை நினைவு கூர்ந்து அவருடைய பணி செல்லும் இடத்தில் மென் மேலும் வளர வாழ்த்தினர்.


பட உதவி:- Sunrise digital studio


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









