கீழக்கரை சாலைகளில் அபாய பள்ளம் மூடப்பட்டது – நெடுஞ்சாலை துறை மெத்தனப்போக்கு முடிவுக்கு வந்தது..

கீழை நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினரால் முக்கு ரோடில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதை வரை புதிய சாலைப் போடப்பட்டது.  ஆனால் அது சரியான முறையில் சீர்படுத்தப்படாமல் சாலையின் இரண்டு புறமும் பள்ளம் ஏற்பட்டு பல விபத்துக்களுக்கு காரணமாக இருந்து வந்தது.  இது சம்பந்தமாக பல அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அளித்தனர்.  இது சம்பந்தமாக மக்கள் டீம் அமைப்பும் போராட்டம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கடந்த திங்கள் அன்று கீழக்கரை மக்கள் களத்தின் சட்டப் போராளிகள் குழுமம் சார்பாக மக்கள் குறை தீர்க்கும் நாளில் ஆட்சியரிடம் இது சம்பந்தமாக ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி புகார் மனு அளிக்கப்பட்டது.  பின்னர் நெடுஞ்சாலைத் துறையின் பொறியாளர் முருகானந்தனையும் நேரடியாக சந்தித்தும் அலைபேசி வாயிலாக அழைத்தும் தங்களுடைய கோரிக்கைகளை பதிவு செய்து வந்தனர். இது சம்பந்தமான செய்தியை நம் கீழை நியூஸ் தளத்திலும் பதிவு செய்து இருந்தோம்.

இத்தனை நிகழ்வுகளைத் தொடர்ந்து தற்போது சாலைகளை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் தொடங்கியுள்ளார்கள்.    சட்டப்போராளிகளின் ஆறு அம்ச கோரிக்கையில் இத்துடன் நிறுத்தி விடாமல் மற்ற பணிகளையும் நிறைவற்றுவதன் மூலம் மக்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

மேலும் நெடுஞ்சாலைத் துறையினர் பள்ளங்களை சரி செய்வதுடன், சரியான முறையில் வேகத்துடன் அமைத்து அவ்வேகத்தடைக்கு ஒளிரும் வண்ணம் பூசுதல், வாகனப் போக்குவரத்து (Sign Boards) குறியீடுகள் போன்றவற்றையும் முழுமையாக செய்து முடித்தால், மக்களின் எதிர்பார்ப்பு  நிறைவடையும்,

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “கீழக்கரை சாலைகளில் அபாய பள்ளம் மூடப்பட்டது – நெடுஞ்சாலை துறை மெத்தனப்போக்கு முடிவுக்கு வந்தது..

  1. மாற்றத்தை நோக்கி நகநகரும் கீழை நகரம்.
    சமூக ஆர்வலர்களுக்கு வாழ்த்துக்கள்..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!