கீழக்கரையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் லெப்பை டீக்கடை முன்பு 5.9.2020 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில்  கீழ்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு  காண வலியுறுத்தி நடைபெற்றது.

1.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.
2. புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு.
3. நீண்ட காலமாக சிறைவாசிகள் ஆக இருக்கும் அப்பாவி இஸ்லாமியர்களின் விடுதலை கோரி,
4. மத்திய மாநில அரசுகளின் அடிமைத்தனம் அடக்குமுறை அரசியலை எதிர்த்தும்.
5. இந்திய நாட்டின் அனைத்து மக்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் சனாதன சக்திகளை எதிர்த்து ஜனநாயக சக்திகள் தொடர்ந்து ஒன்றிணைந்து போராடுதல் போன்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
கண்டன கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் மாரியப்பன் தலைமை தாங்கினார்

சனாதன எதிர்ப்பு சக்திகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி தமுமுக, எஸ்டிபிஐ, இந்திய தவ்ஹீத் ஜமாத், மதிமுக போன்ற தோழமை உறவுகள்,  அமைப்புகள், கட்சிகள் சார்பில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கீழக்கரை நகர் சார்பில் நகர செயலாளரின் பாசித் இலியாஸ் அறிவுறுத்தலின்படி நகர பொருளாளர் ஹிதாயத்துல்லா முன்னிலையில் 500 பிளாட் கிளை சார்பில் கிளைச் செயலாளர் ஃபைசல் கான் தலைமையில் கிளை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!