கீழக்கரை ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகளின் கருவேல மர ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்..

கீழக்கரையில் நிலத்தடி நீரை உறிஞ்சும் விசத்தன்மையுள்ள சீமை கருவேல மரத்தை அகற்ற அரசாங்கம் மற்றும் பல் வேறு சமூக அமைப்புகள் பல முயற்சிகள் செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று கீழக்கரை ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகளும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இன்று ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சார்ந்த 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கருவேல மரங்களின் தீமைகளை எடுத்துரைக்கும் வண்ணமும், மரம் வளர்ப்பதின் நன்மையை விளக்கும் வாசகங்கள் பொதிந்த  பேனர்களை ஏந்தி ஊர்வலமாக சென்றார்கள்.

பள்ளி சிறார்களின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது.  அவர்களின் இந்த சமுதாய விழிப்புணர்வு செயலை கீழை நியூஸ் நிர்வாகம் பாராட்டுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!