கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதிக்கு இடம் மாறிய “நம்ம டாய்லெட் “– பயன்பாட்டுக்கு வருமா ? மீண்டும் காட்சி பொருளாகுமா ? சமூக ஆர்வலர்கள் கவலை

கீழக்கரை நகராட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ. 54 லட்சம் மதிப்பிலான ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நவீன கழிப்பறை பெட்டிகள் பயன்பாடில்லாமல் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் காட்சி பொருளாக கிடந்தது வந்தது . அரசு பணம் விரயமாக்கப்பட்டு, கேட்பாரின்றி கிடந்த நம்ம டாய்லெட், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தில் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி நகராட்சிக்குட்பட்ட பழைய பள்ளிவாசல் தெரு, முத்துச்சாமிபுரம், இருபத்தொரு குச்சு, பெத்தரி தெரு, கடற்கரை பகுதி ஆகிய இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நம்ம டாய்லெட்டுகளை சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தமிழகம் முழுவதும் டெண்டர் எடுத்து விநியோகம் செய்துள்ளது. ஆனால் டாய்லெட்டுகளை அமைக்கவும், அவற்றிற்கு தண்ணீர் வசதி செய்ய இணைப்பு குழாய்கள் உள்ளிட்ட உதிரி பாகங்களை வழங்கவில்லை.

முதற்கட்டமாக டாய்லெட் பெட்டிகளை வழங்கிவிட்டு இந்த நிறுவனம் நகராட்சியில் ரூ. 17 லட்சம் நிதியை பெற்றுச் சென்று விட்டது. இந்நிலையில் மூன்றாண்டு காலங்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்சி பொருளாக காணக் கிடந்த நம்ம டாய்லெட், தற்போது கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதிக்கு இடம் மாறி இருக்கிறது. ஆனால் மீண்டும் மக்கள் உபயோகத்திற்கு வராமல் காட்சிப்பொருளாக மாறி விடக் கூடாது என்பது தான் சமூக ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது இதற்கான முயற்சியை துரிதமாக எடுத்த நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சந்திரசேகருக்கு கீழை நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!