கருவேல மரங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மிக முக்கியமான மாவட்டம் இராமநாதபுர மாவட்டம்தான் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு திரும்பும் இடம் எல்லாம் கருவேல மரத்தின் ஆக்கிரமிப்பைக் காண முடியும். ஆகையால் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் பற்றாக்குறையாலும் பஞ்சத்தாலும் அதிகமாக இரமாநாதபுர மாவட்டம் பாதிக்கப்படுகிறது. சமீப காலமாக கருவேல மரங்களின் தீமைகள் பொதுமக்களிடையே பரப்பப்பட்டு கீழக்கரையில் உள்ள தன்னார்வ அமைப்புகளும் சமூக அமைப்புகளும் தானாக முன்வந்து கருவேல மரங்களை அகற்றும் பணிகளை செய்து வருகிறார்கள்.

இன்று (09-01-2017) கீழக்கரை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 18 வாலிபர் சங்க தர்ஹா பின்புறம் உள்ள கருவேல மரங்கள் இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக அகற்றும் பணி துவங்கப்பட்டது. இப்பணி கீழக்கரை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சந்திரசேகர் மற்றும் கீழக்கரை நகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பொறுப்பாளர்கள் தவ்ஹீத் ஆலம், அஜ்மல்கான், சல்மான் மற்றும் சட்ட ஆலோசகர் சாலிஹ் ஹீசைன் ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்தினர்.


அதே சமயம் கீழக்கரையில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியில் சமூக ஆர்வலர்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் கீழை நியூஸ் இணைய செய்தி தளம் (www.keelainews.com) சார்பாக http://www.facebook.com/klkkaruvamaram என்ற முகநூல் பக்கம் ஆரம்பம் செய்யப்பட்டு ஆதரவு திரட்டப்பட்டு வருவது குறிப்பிடதக்கது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









