கீழக்கரை – ஏர்வாடி தேசிய நெடுஞ்சாலை குப்பைகளால் சீரழியும் அவலம்..

கீழக்கரை வழியாக ஏர்வாடி மற்றும் அதைத் தொடர்ந்து உள்ள வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு வாகனங்கள் ஏராளம். ஆனால் கீழக்கரை உள்ளே நுழைந்தவுடன் வரவேற்பது இருபுறமும் உள்ள கழிவுகளும், குப்பை மேடுகளும்.

இந்த கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரு புறமும் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களும் ஊரின் சுகாதாரத்தைக் காக்கவும், ஊரின் பெயரையும், பாரம்பரியத்தைக் காப்பதில் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

சுகாதார கேட்டினை விளைவிக்கும் விதமாக இந்த சாலை நெடுகிலும் கிடக்கும் குப்பைகளை அகற்றிடவும்  வெளியூர் மற்றும் வெளிநாட்டவர்கள் இந்த சாலையில் பயணம் செய்வதைக் கருத்தில் கொண்டும், நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர்    கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!