ஜல்லிகட்டுக்கு தடை.. மல்லுக்கட்டும் இளைஞர் சமுதாயம்.. வெல்லும் இந்த இளைய சமுதாயம்.. சக்தியை காட்டும் கீழக்கரை கல்லூரி மாணவர்கள்..

கடந்த இருவாரங்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு கரகோஷங்களும் அறவழிப்போராட்டங்களும் வலுத்து வருகின்றது. நேற்று முதல் அலங்காநல்லூர் மற்றும் மெரினா கடற்கரை இளைஞர்களின் அறவழிப் போராட்டத்தால் வாக்கு வங்கி அரசியல்வாதிகளும், அரசாங்கமும் திகைத்துப் போய் நிற்கின்றனர்.

இன்று காலையில் கீழக்கரையில் உள்ள கல்லூரி மாணவர்களும் காலை முதலே வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராடும் மற்ற கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்திலட் PETA வெளியே போ, தடை செய் என்ற கோஷமே ஓங்கி ஒலித்த வண்ணம் இருந்தது. இந்தப் போராட்டம் ஜாதி மத பேதமின்றி மாணவர்களும் பொதுமக்களும் அமைதியான முறையில் நடத்தி வருகின்றனர்.

கீழக்கரையில் உள்ள கல்லூரி மாணவர்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் திருப்புல்லானி வரை சென்று பின்னர் இராமநாதபுர மாணவ சமுதாயத்துடன் இணைந்து போராட தயாராகி வருகிறார்கள்.

இதற்கிடையில் அரசு அதிகாரிகளும் காவல் துறையும் மாணவர்களை போராடட்த்தை கைவிட்டு கலைந்து போக வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். இந்த அமைதியான போராட்டத்தைக் கண்டு சுயநல அரசியல்வாதிகள் கதிகலங்கி போய் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களின் களைப்பை போக்கும் வண்ணமும், ஆதரிக்கும் வண்ணமும் கீழக்கரையை சார்ந்த பல சமூக அமைப்புகள் தண்ணீர் மற்றும் குடிநீர் பானங்களை வழங்கி வருகிறார்கள்.

இந்த அறவழிப் போராட்டம் மாற்றத்தை நோக்கி நகரும் மாணவர்கள் அரசியல் களம் என்பதை காட்டுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “ஜல்லிகட்டுக்கு தடை.. மல்லுக்கட்டும் இளைஞர் சமுதாயம்.. வெல்லும் இந்த இளைய சமுதாயம்.. சக்தியை காட்டும் கீழக்கரை கல்லூரி மாணவர்கள்..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!