கீழக்கரையில் நேற்று 17.02.2017 அன்று நடைபெற்ற மாற்றுத் திறனானிகளுக்கான விழிப்புணர்வு விழாவில் மூன்று பெண்மணிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து வழங்கியது. இந்த விருதுகளை இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அதிகாரி தங்கவேலு வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்ற சாதனையாளர்களின் விபரம் :
சாதனை பெண்மணி : 1
கீழக்கரை காவல் நிலையத்தில் சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கும் கீழக்கரை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு 68 வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் மனித நேய விருது வழங்கினார். இது சம்பந்தமாக கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். தற்போது இவருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு ஆசிரியை ஆபிதா பேகம் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்


சாதனை பெண்மணி : 2
கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஆரிஃபா பேகம் கடந்த ஆண்டிற்கான நல்லாசிரியை விருதினை பெற்று கீழக்கரை நகருக்கும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் பெருமை சேர்த்தார். இவர்களிடம் கல்வி பயின்ற ஆயிரக்கணக்கான மாணவிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். தற்போது இவர்களுக்கும் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியை ஆரிஃபா பேகத்துக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் .


சாதனை பெண்மணி : 3
கீழக்கரை நடுத் தெரு பெத்தம்மா கபுரடி பகுதியில் இராமநாதபுரம் ராஜ் ஹியூமன் சர்வீசஸ் முயற்சியில் மன நலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான சிறுவர் பள்ளி கடந்த இரண்டாண்டு காலமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியின் ஆசிரியை அனிதா மாற்றுத் திறனாளி சிறார்களை அன்போடு அரவணைத்து கல்வி கற்பித்து வருகிறார். அவருக்கும் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியை அனிதாவுக்கு ஆசிரியை ஆபிதா பேகம் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.


மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து வழங்கிய இந்த சிறப்பான விருதினை பெற்ற பெண்மணிகள் மூவரையும் கீழை நியூஸ் குழுமம் மனதார வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









