வணிக வளாகம், காஃபி ஷாப் மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இலவசமாக இன்டர்நெட் வசதி உள்ளது என்ற அறிவிப்பை வைத்து வாடியக்கையாளர்களை கவர்ந்திழுப்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அதேபோல் இன்று அரசுப் பேருந்தில் இலவச இணைய வசதி இருப்பதை பார்த்தோம்.
ஆனால் அதற்கு ஒரு படி மேலாக சென்று கீழக்கரையைச் சார்ந்த சகோதர்கள் இருவர், ஆட்டோ மற்றும் ஆம்னி வண்டிகளில் இலவச இன்டர்நெட் வசதி செய்தி கொடுத்தருப்பது ஆச்சரியத்தை தருகிறது.

இந்த முறையை கீழக்கரையில் VKA Son’s என்ற பெயரில் டிராவல்ஸ் தொழில் தொடங்கியிருக்கும் வாசிம் மற்றும் ரஃபீக் என்ற இரண்டு சகோதரர்கள் இந்த முயற்சியை செய்துள்ளார்கள். இத்தொழில் சம்பந்தமாக அச்சகோதரர்கள்கூறுகையில், தற்சமயம் சோதனை முறையில் ஒரு சில வண்டிகளில் இலவச வசதி ஏற்படத்தியுள்ளோம், இன்னும் சில வாரங்களில் கிட்டத்தட்ட 30க்கு மேல் ஆட்டோக்களை மக்கள் சேவைக்கு அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார். அதை விட தற்சமயம் கீழக்கரையில் 50ரூபாய் கட்டணம் வாங்கும் இடத்திற்கு நாங்கள் நியாயமான முறையில் 30 முதல் 40 ரூபாயே வாங்குகிறோம் என்ற நல்ல செய்தியையும் கூறினார்.
வாழ்கையில் மட்டும் அல்ல வியாபாரத்திலும் மாற்றி யோசித்தால் ஆதரவு கிடைக்கும் என்பதற்கு இச்சகோதரர்கள் உதாரணம். இவர்களின் தொழில் மென்மேலும் வளர்ந்து வெற்றி பெற கீழை நியூஸ் நிர்வாகமும் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறது.
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










புதிய முயற்ச்சி, வாழ்த்துக்கள்.
கட்டண குறைப்புக்கும் வாழ்த்துக்கள்.