சமீபத்தில் மூன்றாம் உலகப்போர் நடந்தால் அதற்கு முக்கிய காரணம் தண்ணீராகத்தான் இருக்கும் என்பதை பார்க்க நேர்ந்தது, சிந்திக்கவும் வைத்தது. ஏனென்றால் சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப் டவுன் எனும் நகரம் “DAY ZERO” எனும் நீரில்லா நிலையை அறிவித்துள்ளது. “DAY ZERO” என்பது அரசாங்கம் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரேசன் முறையில் வழங்கப்படும். இந்த பட்டியலில் இந்தியாவில் உள்ள பெங்களூரும் உள்ளது, அதைத் தொடர்ந்து பெய்ஜிங், டோக்யோ, மாஸ்கோ, மியாமி, இஸ்தான்புல் போன்ற பல நாடுகள் இந்த “DAY ZERO” நிலையை 2025ம் ஆண்டுக்குள் சந்திக்க நேரிடும் என அறிக்கை தெரிவிக்கிறது. அதே சமயம் இந்த அறிக்கை இதற்கு காரணம் முறையான நீர் மேலான்மை திட்டம் இல்லாதது தான் என்பதையும் சுட்டி காட்டுகிறது.
இந்த நிலை கீழக்கரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் உருவாக தூரம் அதிகமில்லை. சமீப காலமாக கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. கிணற்று நீர் வற்றிப்போய் கிணற்றுக்குள் 20 அடிக்கு மேல் (போர்) துளை போட்டு நீர் எடுக்கப்படுகின்றது. இதுவும் எவ்வளவு ஆழம் போகும், எத்துணை நாட்கள் தாங்கும் என்று தெரியவில்லை.
மழை இல்லை அதனால் கிணற்றில் தண்ணீர் இல்லை என்று மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர், ஆனால் உண்மையில், இந்த திடீர் தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் கீழக்கரையை சுற்றியுள்ள பகுதிகளான சின்ன மாயாகுளம், நெய்னாரப்பா தர்ஹா, மங்களேசுவரி நகர் போன்ற பகுதிகளில் இருக்கும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் “சலங்கை மணல்” என்று கூறப்படும் மணலை அரசு அனுமதித்த 3.5 அடி ஆழத்தை விட அளவுக்கு அதிகமாக 30,40 அடிக்கு மேல் தோண்டி அள்ளியதே காரணம்.
இப்பகுதிகள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் எந்த எதிர்ப்பும் இன்றி கடுமையாக மணல் வலம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த மணல் குவாரிகளுக்கு சமீபத்தில் அரசு மீண்டும் அனுமதி கொடுத்துள்ளது.
இதனால் ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்ட அதே நபர்கள் பினாமிகள் மூலம் தற்பொழுது முன்பைவிட அளவுக்கு அதிகமாக JCB இயந்திரங்களை பயன்படுத்தி அசுரவேகத்தில் மணல் மேடுகளை சூரையாடிவருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு குவாரியில் இருந்து மட்டும் 100 டிராக்டர்களில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கீழக்கரை மனிதர்கள் வாழத் தகுதி இல்லாத பாலைவனமாக மாறிவிடும் நிலையே உள்ளது.
இது சம்பந்தமாக கீழக்கரை மக்கள் நல சங்க செயலாளர் MMK.ஜமால் இபுராஹிம் கூறுகையில் “இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளோம், அதே சமயம் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். இது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடில் சட்ட ரீதியான நடவடிக்கையை முன்னெடுப்போம்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.
——-///—————//////——————————–///

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















ஒரு குவாரியில் ஒரு நாளைக்கு 100 டிராக்டர்கள் என்பது பச்சை பொய்..
செய்தி வெளியிடுவதற்கு முன்பாக அதனுடைய உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு வெளியிடுங்கள்..
இந்த பதிவின் மூலமாக நான் இதற்கு ஆதரவாளர் என்று நினைக்க வேண்டாம்..
சம்பந்தப்பட்டவர்கள் பதில் கீழே, தேவையை கருதி சுருக்கம் செய்யப்பட்டுள்ளது..
ஒரு மனல் குவாரி வியாபாரி
(பெயர் குறிப்பிட விரும்பவில்லை) சொந்தமாக ஏழு டிராக்டர் வைத்திருக்கின்றார், காலை 6 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிவரை மனல் அள்ளப்படுகின்றது.
டிராக்டர் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் ஒரு டிராக்டருக்கு ரூபாய்.1000 அல்லது மார்க்கெட் நிலவரப்படி குவாரி உரிமையாளர் கேட்கும் தொகையை செலுத்திவிட்டு எத்துணை டிராக்டர் வேண்டுமானாலும் குவாரியில் மனல் அள்ளிக்கொள்ளலாம்.
10 நாட்களில் குவாரியில் ஏற்படுத்தப்பட்ட ஆழம் மற்றும்
ECR சாலையில் இடைவிடாது மின்னல் வேகத்தில் பறக்கும் டிராக்டர்கள் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கணக்கிட்டு மிகைப்படுத்தாமல் கூறிய கணக்கு தான் 100. நம்ப முடியாத ஒன்று தான்,
நேரில் கண்டு திடுக்கிட்டு தான் களத்தில் இறங்கினோம்.
100 டிராக்டர் என்று தோராயமாக சொல்லப்பட்டாலும் மனல் சூரையாடப்பட்டுக்கொண்டிருக்கும் குவாரிகளை பார்த்தால் நீங்கள் வாயடைத்துபோவீர்கள்.
100 என்பது குறைவு என்று என்னத்தோன்றும்.கிரிக்கெட் மைதானம் போல் சமமாக இருக்காது இந்த மனல் குவாரி, 30,40 அடிக்கு மேல் மனல் மேடாக இருக்கும், இந்த மனல் மேடுகள் கிழக்கே மண்டபம் வரைச் செல்லும்,
வடக்கு தெரு மனல் மேடும் இதன் தொடர்ச்சியே, அந்த மனல் மேடுகள் தான் தற்பொழுது சுரங்கங்களாக உள்ளன.
ஒரு நாளைக்கு ஒரு குவாரியிலிருந்து இத்தனை டிரக் மனல் தான் அள்ளவேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது.
அதற்கென்று “சலான்கள்” வழங்கப்படும்.
குவாரியிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு டிராக்டரும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட அதற்குண்டான சலானை கையோடு வைத்திருக்க வேண்டும்.
ஆனால் இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் எதையுமே செய்வதில்லை. என்றாவது ஒரு நாள் வருவார்கள், பிடிக்கும் டிராக்டருக்கு ஒரு கண்துடைப்புக்கு அபராதம் விதித்துவிட்டு சென்றுவிடுவார்கள். தற்பொழுது நிலைமை படுமோசமாக உள்ளது.
“அதிகார” கைகளின் துணையுடன்,
கேட்க வேண்டிய எல்லத்துறைகளுக்கும் கையூட்டுப் பூட்டு போடப்பட்டுள்ளது.
வேலியே பயிரை மேயும் காலம் இது.
யாரோ ஒரு நல்லவர் நீதிமன்றத்தில் தடை பெற்றதால் தமிழகம் முழுவதும் வெகு நாட்களாக நிருத்தப்பட்டிருந்த மனல் குவாரிகள் தற்பொழுது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது, வெகு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்ததால் தேவைகள் மிக அதிகம், ஆற்றுமனலை விட விலை குறைவு, மேல் மட்ட ஆதரவு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி,
இது மீண்டும் நிறுத்தப்பட்டு விடும் என்ற அச்சம் வேறு, ஆதலால் அவசர கதியில் கணக்கில்லாமல், நேரம் காலம் பார்க்காமல் அள்ளப்படுகின்றது,
அளவுக்கு அதிகமான தேவை,
அளவுக்கு அதிகமான லஞ்சம்,
அளவுக்கு அதிகமான மனல் கொள்ளை..
என் அனுபவத்தில் சொல்கின்றேன், எல்லாவற்றுக்கும் ஏதாவது கேள்வி கேட்கும் கூட்டம் நம் ஊரில் சற்று அதிகம்.
அவர்களும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்,
இது போன்ற விமர்சங்களால் பலர் வெறுத்துப்போய் பொது வாழ்வைவிட்டே விடைபெற்றுவிட்டனர்,
இது போன்றவர்களால் நாம் பல நல்ல சமூக சிந்தனையாளர்களை, சேவகர்களை இழந்துள்ளோம்.
கீழக்கரையில் கேட்க நாதியில்லாமல் நடக்கும் பல அத்துமீறல்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
100 எடுத்தால் என்ன 1 எடுத்தல் என்ன,
மனல் அள்ளினால் தண்ணீர் பஞ்சம் வருமா வராதா, அளவுக்கு அதிகமாக மனல் அள்ளப்பட்டதா இல்லையா,
கீழக்கரைக்கு தண்ணீர் பஞ்சம் நேர்ந்ததா இல்லையா, இன்னும் அள்ளப்படுகின்றதா இல்லையா, முறைகேடு நடக்கின்றதா இல்லையா, எல்லாத் துறைகளுக்கும், எல்லா மட்டத்துக்கும் லஞ்சம் செல்லுகின்றதா இல்லையா,
இதை நிறுத்தினால் ஊருக்கு நல்லதா இல்லையா..
ஏதும் அறியா அப்பாவி மக்களுக்கான சேவைகளில் எங்கள் கீழக்கரை மக்கள் நல சங்கத்தின் பணி தொடரும்.