கீழக்கரையில் இன்று (10/06/2018) கீழக்கரை நகர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது.
இந்நிகழ்சிக்கு நகர் செயலாளர் ஹமீது யூசுப் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு இளஞ்சிறுத்தை நகர் அமைப்பாளர் நைனா முகம்மது , இசுலாமிய சனநாயகப் பேரவை ஹிதயாத்துல்லா மற்றும் பகத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக், தொகுதிச் செயலாளர் அற்புதகுமார், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ராஜேஸ் குமார், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் ஷாஜகான் மற்றும் பஞ்சநாதன், மண்டபம் இஜாஸ் , மண்டபம் பேரூர் செயலாளர் நாகூர் கனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
மேலும் கீழக்கரை நகர் பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் முகாம் செயலாளர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
விளம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் இஃப்தார் விருந்துகள் நடத்தி வரும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், விடுதலை சிறுத்தைக் கட்சியின் நிறுவனர் திருமாவளவன், இஸ்லாமியர்களின்
நம்பிக்கையின் மீது மரியாதை கொண்டு ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, பல இஸ்லாமிய நண்பர்களையும் இஃப்தார் விருந்துக்கு அழைக்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையின் மீது மரியாதை கொண்டு ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, பல இஸ்லாமிய நண்பர்களையும் இஃப்தார் விருந்துக்கு அழைக்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














