ரமலான் மாதத்தில் மக்களின் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும். ஆனால் கீழக்கரை நகரில் பல இடங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் தெரு விளக்குகள் பராமரிக்க படாமல் இருளடைந்த நிலையிலேயே
உள்ளது. இது சம்பந்தமாக மக்கள் டீம் காதர் அரசங்க அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அக்கோரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, ”கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. நகரிலுள்ள தெரு விளக்குகளை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. 21 வார்டுகளிலும் 1200 விளக்குகளுக்கு மேலாகவும், ஹைமாஸ் எனும் உயர் கோபுர விளக்குகள் 9ம் உள்ளது.
கடந்த இரு மாதங்களாக பழுதடைந்த தெரு விளக்குகள் மாற்றப்படாமல் அந்த இடங்கள் பலவும், இருள் மண்டி கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். தெரு விளக்கை பராமரித்து வரும் நகராட்சி மின் ஊழியர்கள் மூவர் இருந்தும் பழுது சரி செய்ய உதிரி பாகங்கள் இல்லாததால் பணிகள் நடைபெறவில்லை என கூறுகின்றனர்.
மேலும் வார்டு ஒன்றுக்கு 10 லைட்டுக்கு மேல் எரியாமல் உள்ளது. நோன்பு காலமாக இருப்பதால், இரவிலும் ஜனங்கள் நடமாட்டம் இருக்கும் .மேலும் பெருநாள் வருவதற்குள்ளாக நகராட்சி நிர்வாகம் அஜாக்கிரதையாக இராமல் விரைந்து நகரெங்கும் இருள் நீக்கி வெளிச்சம் தர ஏற்பாடு செய்து தர வேண்டுகிறோம்” என கோரியுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











