இராமநாதபுரம், செப்.6- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கல்லூரி நடந்தது. கணினி அறிவியல் துறை பேராசிரியர் முஹமது ஆசாத் பெய்க் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜசேகர் பேசுகையில், ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும் உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது. வாழ்க்கை என்ற பாடத்தை கற்பித்து மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மாணவனை தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஆக்குவது ஆசிரியர்களே. ஒரு நல்ல ஆசிரியரால் மட்டுமே மாணவர்களிடம் உள்ள சிறந்த நல்ல பண்புகள், திறமைகளை வெளிக்கொணர முடியும் என்றார். ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக பேராசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்து மடலை கல்லூரி மாணவர்கள் வழங்கினர். கவிதை, பல குரல், தனிநபர் நடனம், வார்த்தை விளையாட்டு, குழு நடனம் உள்பட பல்வேறு போட்டிகளில் வென்ற பேராசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வணிகவியல் துறை பேராசிரியை சித்ரலேகா நன்றி கூறினார். கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் மதீனா, தமிழ் துறை தலைவர் பாலமுருகன் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்தனர்


You must be logged in to post a comment.