இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாக்கிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இரவு தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மண்டபம் கீழக்கரை, மூக்கையூர், தொண்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
பாம்பன் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் தெற்கு கடற்கரை பகுதியான கீழக்கரை, ஏர்வாடி, பெரியபட்டினம் போன்ற கடற்கரை பகுதிகளில் கடல் மிகவும் அமைதியாக காட்சியளிக்கிறது. வானிலை மைய அறிவிப்பை அடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கடலில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தடை முடியும் வரை கீழக்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு





You must be logged in to post a comment.