தேசிய கட்சியான #SDPI_கட்சியின் 11-வது ஆண்டு துவக்க விழா இந்தியா தேசம் முழுவதும் கோளாகளாகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக இரமானதபுரம் கிழக்கு மாவட்டம் #கீழக்கரைநகர் சார்பாக முஸ்லீம் பஜார் லெப்பை டீ கடை அருகில் நகர் தலைவர் கீழை அஸ்ரப் தலைமையில் நகர் துணை தலைவர் ஹாஜா அலாவுதீன் மூவர்ண கொடியே ஏற்றி வைத்தார். தொகுதி துணை தலைவர்_சித்திக் முன்னிலை வகித்தார். நகர் செயற்குழு உறுப்பினர் முர்ஸலின் வரவேற்புரை நிகழ்த்தினார்..
அதனை தொடர்ந்து நகர் செயற்குழு உறுப்பினர் அஹமது நதீர் கட்சியின் உதயமான தினத்தை பற்றி விவரித்தார். பின்னர் நகர் செயற்குழு உறுப்பினர் சிராஜ் இன்றைய பிஜேபி யின் அவலத்தை மக்களுக்கு எடுத்து கூற திராணியுள்ள கட்சி SDPI_யில் இணைந்து பணியாற்ற அனைவரும் வாரீர் என்று அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் நகர் Sdpi கட்சியின் நகர மேற்கு கிழக்கு கிளை நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரான்ட் நகர் தலைவர் முபீஸ் மற்றும் நிர்வாகிகள் கேம்பஸ் ஃப்ராண்ட் நிரவகிகள் மற்றும் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.
இறுதியாக கிழக்கு கிளை தலைவர் பக்ருதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்தினார்.










You must be logged in to post a comment.