கீழக்கரை செப். 11- கீழக்கரைக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் கீழக்கரை நகருக்கு வருகைதந்து புதிதாக உருவாக்கப்பட்ட 12 கிளைகளைகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாகவும் கட்சியை பலப்படுத்தக் கூடிய வியூகங்கள் சம்பந்தமாகவும் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுகள் போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, கீழக்கரை மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துள்ளாஹ் தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான், நகர் தலைவர் ஹமீது பைசல் துணைத்தலைவர் ஹாஜா அலாவுதீன் இணைச்செயலாளர் தாஜுல் அமீன் அயூப் கான் பொருளாளர் அசாருதீன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.





You must be logged in to post a comment.