களையிழந்து காணும் கீழக்கரை.. ரமலான் மாதம் போல் இல்லாமல் வெறிச்சோடிய சாலைகள்…

ரமலான் நோன்பு வந்தவுடன் உலக மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன், சந்தோஷமாகவும் இருப்பார்கள். ஐவேளைத் தொழுகை, தராவீஹ் தொழுகை, என்று பல்வேறு தொழுகை வணக்க வழிபாடுகளிலும் அனைத்து இஸ்லாமிய மக்களும் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள்.

நோன்பு திறப்பதற்காக மாலை 3.00 மணி முதல் கீழக்கரையில் ரமலான் சிறப்பு உணவான வடை, சமோசா, கட்லெட், ரோல், பழச்சாறு, சர்பத், கடல்பாசி, ஃபலூடா போன்ற எண்ணற்ற வகையான உணவுப் பொருட்கள் அனைத்து பகுதிகளிலும் ரமலானுக்காக சிறப்பு கடைகள் திறக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும்.

ஆனால் இந்த வருடம் வியாபாரிகள் தங்கள் வருமானத்தை இழந்து, சாமானியர்கள் சந்தோசத்தை இழந்து, குழந்தைகள் குதூகலம் மறைந்து வாடிய முகத்துடன் காணப்படுகிறார்கள்.  இந்த கொடிய கொரோனோ வைரஸை ஒழிக்க நம்மை படைத்த இறைவனிடம் இந்த புனித மாதத்தில் இரு கரம் ஏந்துவோம்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!