கீழக்கரை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக சிறப்பான சேவை செய்த உறுப்பினர்களுக்கு ஆயுள் கால உறுப்பினர் சான்றிதழ் வழங்கியும், ரெட்கிராஸ் சேவைகளை விளக்கும் செயல் விளக்க கூட்டம் இன்று மாலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மஹாலில் நடைபெற்றது.
இந்த விழாவில் ரெட்கிராஸ் சொசைட்டி கீழக்கரை நகர் பொருப்பாளர் அப்பா மெடிக்கல் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இராமநாதபுரம் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் ஹாரூன், மாவட்ட செயலாளர் ராக்லேட் மதுரம், முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ராக்லேட் மதுரம் கீழக்கரையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் இருப்பதாகவும், இதற்கு முக்கிய காரணமாக கீழக்கரை சுந்தரம் மற்றும் இந்த சொசைட்டியின் கீழக்கரை பொறுப்பாளர்களின் பங்கு பாராட்ட கூடியது என்றார். இந்த விழாவில் கீழக்கரை ரெட்கிராஸ் சொசைட்டியின் பொறுப்பாளர்கள் முகம்மது அஜீகர், நூர் ஆப்டிகல் ஹசன், அற்புதகுமார், வழக்கறிஞர் கேசவன், மாணிக்கம், செய்யது சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் சிறப்பாக ரெட்கிராஸ் சொசைட்டியில் சேவை ஆற்றிய பலருக்கு ஆயுள் கால சான்றிதழ் வழங்கப்பட்டது.








You must be logged in to post a comment.