கீழக்கரையிலும் அனைத்து கட்சி சார்பாக ரத யாத்திரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..அனைத்து சமுதாய மக்களுக்கும் கீழக்கரை பிரமுகர்கள் நன்றி..

கடந்த இரண்டு நாட்களாக ரத யாத்திரையை மறிக்கும் போராட்டம் செங்கோட்டை முதல் குமரி வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது.

இன்று (22/03/2018) கீழக்கரை வழியாக செல்லும் ரத யாத்திரையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தலைமையில் SDPI கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., த.மு.மு.க., இந்திய தவ்ஹீத் ஜமாத்,மக்கள் டீம் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தை தொடர்ந்து கீழக்கரை வழியாக செல்ல வேண்டிய ரத யாத்திரை உத்திரகோசமங்கை வழியாக செல்ல காவல்துறையினர் அனுமதியளித்தனர்.

மேலும் பல்வேறு சமுதாய மக்கள் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழும் கீழக்கரையில் அந்நிய சக்திகளின் சதி வலைக்குள் சிக்காமல் ஒற்றுமையுடன் களத்தில் நின்று போராடிய அனைத்து சமுதாய மக்களுக்கும் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் நன்றியை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!