கீழக்கரை இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிதிலமடைந்து காணப்படும் பள்ளங்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது.
இந்த சாலையை சீரமைப்பு செய்ய பல்வேறு சமூக, சமுதாய அமைப்புகள் தொடர்பு குரல் கொடுத்து வந்த நிலையில் இந்த பணி தாமதம் செய்யப்பட்ட வந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைப்பு செய்ய சம்பந்தப்பட்ட துறையிரை வலியுறுத்தி நாளை 11/01/25 சனிக்கிழமை காலை 6.45 மணிக்கு கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றினைந்து இதே சாலையில் நடைபயணம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோர்களிடம் மனு வழங்கும் ஜனநாயக வழி நடைபயணம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நடை பயணத்திற்கு அனுமதி கோரி முறையாக காவல் துறை அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று எங்களை தொடர்பு கொண்ட கீழக்கரை காவல் துறை சார்பு ஆய்வாளர் சால்மோன் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் பொது மக்கள் நலன் கருதி அமைதி நடக்க இருப்பதை தெரிவித்ததின் அடிப்படையில் மக்கள் நல பாதுகாப்பு கழக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் சிராஜுதீன், நுகர்வோர் நல சங்கம் தலைவர் சகோதரர் செய்யது இப்ராகீம், அதன் செயலாளர் பாக்கர் அலி , மக்கள் நல பாதுகாப்பு கழக செயற்குழு உறுப்பினர் சீனி முஹம்மது சேட், சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தாஜூல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அரசு தரப்பில் கீழக்கரை தாலுகா வட்டாட்சியர் ஜமால் முஹம்மது தலைமையில் இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் கிருஷ்ணன், இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் இராஜ்குமார், கீழக்கரை சார்பு ஆய்வாளர் சல்மோன, காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக காவலர் பால முருகன், உளவு பிரிவு சார்பு ஆய்வாளர் முருக பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டதின் நிறைவில் 2025 ஜனவரி மாதம் 23ம் தேதி கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் காணப்படும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் சிதிலமடைந்த பகுதிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைப்பு செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க உறுதி அளித்த அடிப்படையில் நாளை (11/01/2025) நடைபெற இருந்த நடைபயணம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்ட அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், மற்றும் உளவு துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்த பீஸ் மீட்டிகில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் கீழக்கரை பொதுமக்கள் சார்பாக இந்நடைபயணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.