இந்தியாவில் தமிழகம் உட்பட அனைத்து இடங்களிலும் நவராத்திரியை ஒட்டி கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும் பல்வேறு இடங்களில் கொலு வைக்கப்பட்டடுள்ளது.
இந்த விழாவை ஒட்டி வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள முக அலங்கார நிலையம் வைத்திருக்கும் அசோகன்
வீட்டில் வைத்திருக்கும் கொலு படிக்கட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவருடைய வீட்டில் மிகவும் அழகாகவும், அருமையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
அன்பு நகரில் அமைந்துள்ள இவரது வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி 1 முதல் 10 நாட்களுக்கு நவராத்திரி உற்சவ விழா வீட்டில் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். மாலை நேரங்களில் பஜனை செய்து வழிபாடுகள் நடத்தி பூஜையில் கலந்து கொள்ள வருவோருக்கு சுண்டல் பொங்கல் சிறுதானிய தின்பண்டங்களை அவரும் அவரது மனைவியும் குடும்பத்தினரும் வழங்குகின்றனர்.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு







You must be logged in to post a comment.