ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் ஆணையாளர் ரங்கநாயகி முன்னிலையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து தீர்மானங்கள் வாசிப்பதற்கு முன்பாக 21 வது வார்டு உறுப்பினர் சேக் உசைன் எழுந்து கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்களை நியமிப்பதற்கு முன் தகவல் பலகையில் பதிவது இல்லை என்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிப்பதில்லை என்றும் நகர்மன்றத்தில் மாதமாதம் வைக்க கூடிய தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை என்றும் தெரிவித்து அவரும் உறுப்பினர் டெல்சியும் வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்றத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரை இழிவாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அனைத்து உறுப்பினர்களும் கண்டனத்தை தெரிவித்தனர்.
19 ஆவது வார்டு உறுப்பினர் சப்ராஸ் நவாஸ் தெரிவிக்கையில் நகராட்சியில் ஏற்கனவே தவறு செய்த ஒப்பந்ததாரருக்கு மீண்டும் பணி வழங்கியது கண்டிக்கத்தக்கது என்றும் ஒரே ஒப்பந்ததாரருக்கு அனைத்து விதமான நகராட்சி பணிகளை வழங்குவது அவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் அவர்கள் எப்படி பணி செய்வார்கள் என்று கேள்வி எழுப்புனார் . ஒப்பந்தங்களை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து மக்களுக்கு முறையாக பணிகள் சென்றடைய வேண்டும் என்றும் சிறப்பாக செயல்படும் திராவிட மாடலாட்சிக்கு எவ்வித கலங்கமும் ஏற்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளிடம் கடுமையாக விவாதித்தார்.
1வது வார்டு உறுப்பினர் பாதுஷா தெரிவிக்கையில் நகராட்சியில் வரி கூடுதலாக பிறப்பிக்கின்றனர் முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்று குற்றச்சாட்டை எழுப்பினார். அனைத்திலும் வரி விதித்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் எப்படி வாழ முடியும் என்ற கேள்வி எழுப்பினார் அவர்களுடைய குறைந்த வருமானத்தில் அதிகமான வரி விதிப்பதை நிறுத்த வேண்டும் அவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் மீன் மார்க்கெட் ஏன் கட்டப்படவில்லை இன்னும் ஏன் காலதாமதம் ஏற்படுகிறது என்றும் உறுப்பினர்களிடையே கேள்விகள் எழுப்பப்பட்டது. 21 வார்டுகளில் உள்ள குளறுபடிகள் அனைத்தும் மறுசீரமைக்க வேண்டும் என்றும் சுற்றியுள்ள கிராமங்களை நகராட்சிகளில் இணைக்க கூடாது என்றும் வார்டு வரையறையில் உறுப்பினர்களை ஆலோசிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
You must be logged in to post a comment.