ரமலான் தொடர்பாக கீழக்கரை துணை கண்காணிப்பாளர் தலைமையில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் கூட்டம்……

இந்தியா முழுவதும் கரோனா காரணத்தினால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு துவங்க உள்ள காரணத்தினால்.  144 தடைக்கு எந்த ஒரு தளர்வு இல்லை அதே தடை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதைப்பற்றி கீழக்கரை டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளுடன் இன்று (23/042020) கீழக்கரை உசேனிய திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு ரமலான் நோன்பை முன்னிட்டு  அறிவித்துள்ள அறிவிப்பு மற்றும்  கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் விளக்கப்பட்டது. அவை,

  • ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.
  • ரமலான் மாத தொழுகையை வீட்டிலேயே கடைப்பிடிக்க வேண்டும்.
  • நோன்பு தொழுகைக்காக பள்ளிவாசல் திறக்கப்பட கூடாது.
  • ரமலான் நோன்பு சம்பந்தமாக எந்த இடத்திலும் திடல் தொழுகைக்கு கூட்டமாக கூடுதல் கூடாது.
  • கோவிட்19 கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிரத்தும், வீடுகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • எக்காரணத்தை கொண்டும் அருகில் உள்ள வீடுகளுக்கு செல்வது, நண்பர்களை சந்திப்பது, உறவினர்களை வீடுகளி அனுமதிப்பதை தவிர்க்கவும்.
  • இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.
  • நோன்பு திறப்பதற்காக மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது கடைகள் கண்டிப்பாக திறக்கக் கூடாது.
  • கடைகளில் நோன்புக்கஞ்சி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆகிய விபரங்கள் அரசு சார்பில் ஜமாத்தார்கள்  முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இதில் கீழக்கரை ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் இராமச்சந்திரன்,  திருப்பணி சார்பு ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!