கீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மார்க்க சிறப்பு நிகழ்ச்சி ஜீன் 18 திங்கள் கிழமை கீழக்கரை இஸ்லாமிய அமைதி மையத்தில் (KIPC சென்டர்) நடைபெற்றது .
இச்சிறப்பு நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில பொது செயலாளர் மௌலவி ஹனிஃபா மன்பயீ மற்றும் மதுரை இஸ்லாமிக் சென்டர் பொறுப்பாளர் முஹ்யித்தீன் குட்டி உமரி ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர் .
இந்நிகழ்ச்சியில் அரம்பமாக பேசிய ஹனிஃபா மன்பயீ இறை செய்தியை மக்களுக்கு எடுத்து கூற வேண்டிய அவசியத்தை அழகிய உதாரணங்களுடன் விளக்கினார். நம் அருகில் உள்ள நபருக்கு வந்த கூரியர் கடிதத்தை அவர் அங்கு இல்லாத காரணத்தால் அந்த கூரியர் கொண்டு வந்த நபர் நம்மிடம் கொடுத்துவிட்டு அவர் வரும்போது கொடுக்க வேண்டி கூறி விட்டு சென்றார் ஆனால் அக்கடிதத்தை நாம் அவரிடம் சேர்க்காது நம்மளவில் வைத்து கொண்டால் நாம் எவ்வளவு பெரிய குற்றவாளிகாக, தவறிழைத்தவராக ஆகிறமோ அது போல் முழு மனித சமூகத்துக்காக வந்த இந்த இறை செய்தியை மாற்று மத சகோதரர்களிடம் சேர்க்காமல் நம்முடன் வைத்து கொள்ளும் நாம் , மிக பெரிய குற்றவாளி அல்லவா என்ற பல உதாரணங்களுடன் விளக்கினார் . பின்னர் பேசிய முஹ்யித்தீன் குட்டி உமரி திருக்குர்ஆன் உடன் நம்முடைய வாழ்வை அமைத்து கொண்டு பயணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் . நம்மில் எத்தனை நபர்கள் முழு திருக்குர்ஆனை தமிழ் பொழிபெயர்ப்பில் வாசித்தவர்கள் உண்டு . அவ்வாறு முழு திருக்குர்அனை வாசித்து வாழ்ந்தால் அது நம்மை அழகிய முறையில் வழி நடத்தும் என்றார் .
இந்நிகழ்சியை முஸ்ஸம்மில் மற்றும் அன்சாரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










