தரமற்ற ஒப்பந்தகாரர்கள் பணி.. கண்டுகொள்ளாத கீழக்கரை நகராட்சி..உயிரை பலிவாங்க காத்திருக்கும் சாக்கடை வாருகால்..

தாயில்லா பிள்ளை போல், நிரந்த ஆணையர் இல்லாமல் கவனப்பாரற்று சீர் குலைந்தே கிடக்கிறது கீழக்கரை நகராட்சி நிர்வாகம்.  தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் வாய்ப்பு கிடைத்தவர்கள் சுருட்டுவதற்கு நேரத்தை எதிர்பார்த்து இருப்பது போல்தான் உள்ளது நகராட்சியின் செயல்பாடு.

கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்தும், பொதுமக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் வகையில் திறந்தும் கிடந்த வண்ணம்தான் உள்ளது. சமீபத்தில் கீழக்கரையின் அவல நிலையை விளக்கி பல்வேறு சமூக அமைப்புகள் பிரசுரம் வெளியிட்டனர்.  பின்னர் அதை தொடர்ந்து அவசர கதியில் சில இடங்களில் சீர்கேடு சரி செய்யப்பட்டது.  ஆனால் இரண்டு வாரங்கள் கூட தாங்கவில்லை. உதாரணமாக வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள பைத்துல்மால் அருகே இருந்த வாருகால் மூடி சில வாரங்களுக்கு முன்பு சரி செய்யப்பட்டது, ஆனால் மீண்டும் இடிந்து விட்டது, இது போன்ற தரமற்ற பணிகளுக்கு யார் காரணம், பணி வழங்கிய பின்  ஓப்பந்தகாரர்கள் செய்யும் பணியை முறையாக நகராட்சி அதிகாரிகள் கண்கானிக்காததே காரணம்.  இதனால் பொதுமக்கள் வரி பணமே விரயமாகிறது. மக்களிடம் முறையில்லாமல் வரி வசூல் செய்ய முற்படும் நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு தரமான சேவையும் செய்ய முன் வர வேண்டும்.

அதே போல்  வடக்குத் தெரு பகுதியில் பல் வேறு இடங்களில் முக்கியமாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் வாருகால் மூடிகள் திறந்த வண்ணம் கிடக்கிறது. ஏற்கனவே பல முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் கால்களை பதம் பார்த்துவிட்டது, ஆனால் உயிர் பறிபோனால் தான் நகராட்சி நடவடிக்கை எடுக்கும் என தோன்றுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம்:-

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!