துபாயில் கீழக்கரை வடக்கு தெரு சகோதரர்களின் இஃப்தார் நிகழ்வு..

துபாயில் இன்று (31/03/2024) லேன்ட் மார்க் ஹோட்டலில் கீழக்கரை வடக்குத் தெரு சகோதரர்களின் இஃப்தார் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 40கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் அக்பர்கான் வருங்காலத்தில் படித்து விட்டு அமீரகம் வரும் சகோதரர்கள் எவ்வாறான தொழிற் படிப்புகள் அவசியம் என்பதையும், தெருவின் நலன் மற்றும் வளர்ச்சியுயும் மனதல் கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதை தொடர்ந்து அமீரகத்தில் தொழில் புரியும் மற்ற சகோதரர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அது போல் வரும் காலங்களில் தெரு மக்களின் ஒன்று கூடலை தொடர்ச்சியாக நடத்துவது, வேலை தேடி வரும் நபர்களுக்கு வழிகாட்டும் மையம் அமைத்தல், தற்போதைய அமீரகத்தின் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் போன்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டது.

பின்னர் அனைவரின் நலம் விசாரிப்புடன் நிகழ்ச்சி் இனிதே நிறைவுற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!